பால்கரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி கடத்தி கற்பழிப்பு ஒருவரை பிடித்து போலீஸ் விசாரணை


பால்கரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி கடத்தி கற்பழிப்பு ஒருவரை பிடித்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 March 2019 4:00 AM IST (Updated: 29 March 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

பால்கரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி கடத்தி கற்பழிப்பு ஒருவரை பிடித்து போலீஸ் விசாரணை

வசாய்,

பால்கரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டாள். இது தொடர்பாக போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி கற்பழிப்பு

பால்கர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி சம்பவத்தன்று இரவு தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தாள். இந்த நிலையில், அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்மஆசாமி தூக்கத்தில் இருந்த சிறுமியை வெளியே கடத்திச்சென்று கற்பழித்து இருக்கிறார்.

பின்னர் சிறுமியை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டார். தூக்கத்தில் இருந்து எழுந்த பெற்றோர் அருகில் படுத்து இருந்த மகள் காணாததை கண்டு திடுக்கிட்டனர்.

போலீஸ் விசாரணை

உடனடியாக பதறியபடி வெளியே ஓடிவந்து தேடினர். அப்போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் அலங்கோலமான நிலையில் மகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story