வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.80 அடியாக குறைந்தது - சென்னைக்கு 66 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது


வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.80 அடியாக குறைந்தது - சென்னைக்கு 66 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது
x
தினத்தந்தி 29 March 2019 4:30 AM IST (Updated: 29 March 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.80 அடியாக குறைந்தது. இதன் காரணமாக சென்னைக்கு 66 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம். இதுதவிர மழைக்காலங்களில் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு ஓடைகளில் இருந்தும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவதுண்டு.

தற்போது வடவாறு வழியாக ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. அதே நேரத்தில் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

முழு கொள்ளவை எட்டியப்படி இருந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது கடும் வெயிலின் காரணமாக, வேகமாக குறைய தொடங்கி இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 43.80 அடியாக குறைந்து இருந்தது. வழக்கமாக சென்னைக்கு வினாடிக்கு 74 கன அடி நீர் அனுப்பி வைக்கப்படும். ஆனால் நேற்று வினாடிக்கு 66 கன அடி நீர் மட்டுமே அனுப்பப்பட்டது. ஏரியில் 39 அடி வரைக்கும் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடதக்கதாகும்.

Next Story