நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு


நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 30 March 2019 4:00 AM IST (Updated: 29 March 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிட கடந்த 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 15 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் நாம் தமிழர் கட்சி உள்பட 5 பேரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதம் உள்ள 10 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யா நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களின் சின்னம் விவரம் வருமாறு:-

1.மா.தியாகராஜன் (அ.தி.மு.க.)-இரட்டை இலை

2.ஆ.ராசா(தி.மு.க.)- உதயசூரியன்

3.அசோக்குமார்(பகுஜன் சமாஜ் கட்சி)- யானை

4.ராஜேந்திரன்(மக்கள் நீதி மய்யம்)-டார்ச் லைட்

5.எம்.ராமசாமி(அ.ம.மு.க.)- பரிசு பெட்டகம்

6.ஆறுமுகம்(சுயேச்சை) -மோதிரம்

7.சுப்ரமணி(சுயேச்சை)- ஊன்றுகோல்

8. நாகராஜன் (சுயேச்சை)- தொலைபேசி

9.ராஜரத்தினம் (சுயேச்சை)- வைரம்

10.ராஜா (சுயேச்சை)- ஆட்டோ ரிக்‌ஷா.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் போது, வேட்பாளர் ஆறுமுகம், ராஜா இருவரும் ஆட்டோ சின்னம் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்க நடவடிக்கை எடுத்தார். குலுக்கலில் சுயேச்சை வேட்பாளர் ராஜாவுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் கிடைத்தது. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்து விட்டு, வி.வி.பேட் எந்திரம் மூலம் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்வது குறித்து கட்சியினருக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் உசன் லால், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story