இறுதி பட்டியல் வெளியீடு: தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டி


இறுதி பட்டியல் வெளியீடு: தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டி
x
தினத்தந்தி 30 March 2019 4:00 AM IST (Updated: 30 March 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டியிடுகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி முதல் 26-ந்தேதி வரை நடந்தது. இதில் 48 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனு பரிசீலனையின்போது, 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 40 பேர் மனு ஏற்கப்பட்டது. தொடர்ந்து வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் அளிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இயக்குனர் கவுதமன் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். நேற்று மாலை 3 மணியுடன் வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்தது. நேற்று மொத்தம் 2 பேர் வாபஸ் பெற்றனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்

தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பா.ஜனதா, தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 37 பேர் களத்தில் உள்ளனர்.

பின்னர் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளர்கள் சீமா சர்மா ஜெயின், துக்கி சியாம் பெய்க், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேட்பாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்து கொடுத்த சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஒரே சின்னத்தை 2 பேர் கேட்கும்போது, குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரம் வருமாறு:-

கனிமொழி கருணாநிதி (தி.மு.க.) - உதயசூரியன், தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா) - தாமரை, ம.புவனேசுவரன்(அ.ம.மு.க.) - பரிசு பெட்டகம், த.பொ.சீ.பொன்குமரன் (மக்கள் நீதி மய்யம்) - டார்ச்லைட், சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் (நாம் தமிழர் கட்சி) - கரும்பு விவசாயி, வே.சிவா (பகுஜன் சமாஜ்) - யானை, காபிரியேல் ஜேம்ஸ் பெர்ணான்டோ (பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா(செ))- ரொட்டி, ம.மகாராஜன் (பிரகதிசில் சமாஜ்வாடி கட்சி(லோகியா)) - சாவி, ஈ.வி.எஸ்.ராஜகுமார் நாயுடு (தமிழ் தெலுங்கு நேஷனல் கட்சி) - டிராக்டர் இயக்கும் விவசாயி, ராஜ்குமார் போலையா (யுனிவர்சல் பிரதர்ஹூட் மூவ்மண்ட்)- புல்லாங்குழல், து.ஜெயகணேஷ் (நாம் இந்தியர்) - ஆட்டோ ரிக்‌ஷா, எஸ்.ஜெர்மனஸ்(கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி) - ஹெலிகாப்டர், மை.அண்டோ ஹிலரி (சுயேச்சை) - தலைக்கவசம், அமலன் ராஜீவ்போனிபாஸ் (சுயே) - வைரம், மு.கணேசன்(சுயே) - கால்பந்து, க.குரு (சுயே) - ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை, மு.சங்கரலிங்கம் (சுயே) - காளிபிளவர், க.சரவணன் (சுயே) - புட்டி, வே.சன்மேன் (சுயே) - கிரிக்கெட் மட்டை, ஜெ.சிவனேசுவரன் (சுயே) - பலூன், இரா.ச.சுபாஷினி மள்ளத்தி (சுயே) - தீப்பெட்டி, பா.செல்வின் (சுயே) - பிரஷர் குக்கர், ரா.சேனை நடராஜன் (சுயே) - வாயு சிலிண்டர், பூ.பாலமுருகன் (சுயே) - தென்னந்தோப்பு, பிரதீப் கணேசன் (சுயே) - மோதிரம், ச.பொன்ராஜ் (சுயே) - கடித பெட்டி, மு.பொன்னுசாமி (சுயே) - அன்னாசி பழம், மரகதராகவராஜ் (சுயே) - நடைவண்டி, அ.ரமேஷ் (சுயே) - தொப்பி, ஜெ.ரவிசங்கர் (சுயே) - கப் அண்ட் சாசர், ம.ராமகிருஷ்ணன் (சுயே) - பானை, பா.ராமகிருஷ்ணன் (சுயே) - கப்பல், மு.ராஜலிங்கம் (சுயே) - தொலைபேசி, எஸ்.லூடஸ் (சுயே) - தண்ணீர் ஊற்றும் ஜாடி, ஆ.ஜெயராஜ் (சுயே) - வாளி, கா.ஜேம்ஸ் (சுயே) - டீசல் பம்பு, ஞா.ஜேஸ்பர் ஞானமார்ட்டின் (சுயே) - புகைபோக்கி.

Next Story