நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 26 பேர் போட்டி


நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 26 பேர் போட்டி
x
தினத்தந்தி 29 March 2019 10:00 PM GMT (Updated: 29 March 2019 7:09 PM GMT)

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 26 பேர் போட்டியிடுகிறார்கள்.

நெல்லை, 

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 26 பேர் போட்டியிடுகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. 26-ந் தேதி வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. 27-ந் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடந்தது. மனுவை திரும்ப பெற நேற்று கடைசிநாள் ஆகும்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் இந்தியன் கட்சி வேட்பாளர்கள் உள்பட 39 பேர் 49 வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை தொடர்ந்து 27 பேர் களத்தில் நின்றனர்.

26 பேர் போட்டி

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனின், மாற்று வேட்பாளரான அவருடைய மகன் செரோன் ராஜா சேவியர் தனது வேட்பு மனுவை நேற்று வாபஸ் வாங்கினார். இறுதியாக தொகுதியில் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம், சின்னம் வருமாறு:-

மனோஜ் பாண்டியன்-(அ.தி.மு.க.- இரட்டை இலை), ஞானதிரவியம் (தி.மு.க.- உதயசூரியன்), மைக்கேல் ராயப்பன் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்- கிப்ட் பாக்ஸ்), வெண்ணிமலை (மக்கள் நீதிமய்யம்-டார்ச் லைட்), சத்யா (நாம் தமிழர் கட்சி-கரும்பு விவசாயி), இசக்கியம்மாள் (பகுஜன் சமாஜ்கட்சி-யானை), சிவசங்கர் (ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர் கட்சி-சைக்கிள்), செல்வகணேசன் (யுனைட்டேட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பார்டி-டில்லர்), ராமகிருஷ்ணன் (நாம் இந்தியர் கட்சி-டிராக்டர்), இந்துராணி (சுயேச்சை-சாவி), கமலக்கண்ணன் (சுயேச்சை-தம்புள்ஸ்), செல்வபிரகாஷ் (சுயேச்சை- ஹெல்மெட்), பகவதிகேசன் (சுயேச்சை-காலிபிளவர்), பால்சாலமன் பாண்டியன் (சுயேச்சை- டிவி), மகாராஜன் (சுயேச்சை-பேனா நிப்), மகாராஜன் (சுயேச்சை- குக்கர்), மணிகண்டன் (சுயேச்சை- டிரக்), மணிகண்டன் (சுயேச்சை-புல்லாங்குழல்), மனோகரன் (சுயேச்சை- வாக்கிங் ஸ்டிக்), முருகேசன் (சுயேச்சை-வைரம்), மோகன்ராஜ் (சுயேச்சை-கியாஸ் ஸ்டவ்), ராமசுவாமி (சுயேச்சை-பேட்), ராமமூர்த்தி (சுயேச்சை-மின்கம்பம்), ராஜ்குமார்(சுயேச்சை- பானை), ராஜீவ் (சுயேச்சை- மோதிரம்), ரத்தினசிகாமணி (சுயேச்சை-ஆட்டோ ரிக்‌ஷா).

Next Story