திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு கால்வாய் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு கால்வாய் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 29 March 2019 9:30 PM GMT (Updated: 29 March 2019 7:37 PM GMT)

திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு கால்வாய் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குலசேகரன்பட்டினம்,

திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு கால்வாய் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தாமிரபரணி ஆற்றுப்பாசன குளங்கள்

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வடகால், தென்கால் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் தென்திருப்பேரை கடம்பா குளம், குரும்பூர் நல்லூர் குளம், திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு ஓடை வழியாக தண்ணீர் சென்று, பின்னர் அங்கிருந்து கருமேனியாற்றின் வழியாக மணப்பாடு கடலில் சங்கமிக்கும்.

கால்வாய்

இந்த நிலையில் திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு செல்லும் ஓடையின் மீது உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த ஆண்டு தருவைகுளத்துக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட குலசேகரன்பட்டினம் தருவைகுளம் தண்ணீரின்றி வறண்ட நிலையில் உள்ளது.

எனவே திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில், மாற்று வழியில் கால்வாய் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story