நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., கொ.ம.தே.க. வேட்பாளர் உள்பட 29 பேர் போட்டி


நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., கொ.ம.தே.க. வேட்பாளர் உள்பட 29 பேர் போட்டி
x
தினத்தந்தி 30 March 2019 3:45 AM IST (Updated: 30 March 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., கொ.ம.தே.க. வேட்பாளர்கள் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 36 பேர் வேட்புமனுதாக்கல் செய்து இருந்தனர். இவர்களின் மனுக்கள் 27-ந் தேதி மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டன.

இதில் 6 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 30 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இவர்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ள நேற்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்று சுயேச்சை வேட்பாளர் பொன்னுசாமி தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதன்படி 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

கட்சி வாரியாக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னம் விவரம் வருமாறு:-

1. ப.காளியப்பன் (அ.தி.மு.க.) - இரட்டை இலை

2. ஏ.கே.பி.சின்ராஜ் (கொ.ம.தே.க.) - உதயசூரியன்

3. பா.பாஸ்கர் (நாம் தமிழர் கட்சி) - கரும்பு விவசாயி

4. ரா.தங்கவேலு (மக்கள் நீதிமய்யம்) - மின்கல விளக்கு

5. பி.பி.சாமிநாதன் (அ.ம.மு.க.) - பரிசு பெட்டகம்

6. வெ.ராமன் (பகுஜன் சமாஜ்கட்சி) - யானை

7. தி.ரமேஷ் (அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி) - மட்டை பந்து

8. சீ.செந்தில்முருகன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) - கால்பந்து

9. சீ.மாணிக்கம் (உழைப்பாளி மக்கள் கட்சி) - தொப்பி

10. மு.பெ.முத்துசாமி (இந்திய கனசங்கம் கட்சி) - வெண்டைக்காய்

11. என்.கே.எஸ்.சக்திவேல் (சுயே) - பிரஷர் குக்கர்

12. வ.ஆறுமுகம் (சுயே) - செங்கல்

13. ந.ராமசாமி (சுயே) - வைரம்

14. ப.ராமசாமி (சுயே) - காலணி

15. கா.காளியப்பன் (சுயே) - தென்னந்தோப்பு

16. செ.காளியப்பன் (சுயே) - இரட்டை தொலைநோக்காடி

17. பெ.காளியப்பன் (சுயே) - சிறுமியர் சட்டை

18. சு.சக்திவேல் (சுயே) - கப்பல்

19. ர.சரவணவேல் (சுயே) - தரைவிரிப்பு

20. எஸ்.சிவாஜி (சுயே) - வாயு சிலிண்டர்

21. சு.செல்லத்துரை (சுயே) - சீர்வளி சாதனம்

22. கே.ஆர்.செல்வராஜ் (சுயே) - தொலைக்காட்சி தொலைஇயக்கி

23. வெ.சோ (சுயே) - பெட்டி

24. மு.நடராஜன் (சுயே) - ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை.

25. ப.நல்லதம்பி (சுயே) - ஒலிவாங்கி.

26. கு.பிரபு (சுயே) - கைப்பெட்டி

27. ரா.ரமேஷ் (சுயே) - மின்கம்பம்

28. வி.வினோத்குமார் (சுயே) - பட்டாணி

29. பா.விஜயகார்த்திகேயன் (சுயே) - கணினி

இவர்களுக்கான சின்னங்களை மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆசியா மரியம் நேற்று வெளியிட்டார். பின்னர் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் மற்றம் ‘விவிபேட்’ எந்திரம் ஆகிய 3 பகுதிகளை கொண்டதாகும். இதில் வாக்குப்பதிவு எந்திரத்தில் தான் வேட்பாளர்களின் சின்னம், பெயர் இடம் பெற்று இருக்கும். ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் அதிகபட்சமாக 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடி அறைக்கும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது. எனவே நாமக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story