நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லையில் 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தேர்தல் பாதுகாப்பு டி.ஜி.பி. தலைமையில் நடந்தது


நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லையில் 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தேர்தல் பாதுகாப்பு டி.ஜி.பி. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 29 March 2019 10:30 PM GMT (Updated: 29 March 2019 7:53 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.

நெல்லை, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 982 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக தேர்தல் பாதுகாப்பு டி.ஜி.பி. விஜயகுமார் நெல்லைக்கு நேற்று வந்தார். அவர் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு முரளி ரம்பா, கன்னியாகுமரி மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீநாத், தேர்தல் சூப்பிரண்டு விஜயகுமார், நெல்லை மாநகர துணை கமிஷனர்கள் சாம்சன், பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூடுதல் பாதுகாப்பு

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலான போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். கடந்த முறை வன்முறை நடந்த வாக்குச்சாவடிகளை கண்டறிந்து பாதுகாப்புகளை பலப்படுத்த வேண்டும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கடந்த முறை தேர்தலின் போது வன்முறையில் ஈடுபட்டு வழக்குப்பதிவானவர்களின் பட்டியல் தயார் செய்ய வேண்டும். அவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யலாம் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story