தமிழக-கேரள எல்லையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வாக்கு சேகரிப்பு


தமிழக-கேரள எல்லையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 30 March 2019 3:45 AM IST (Updated: 30 March 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்காசி, 

தமிழக-கேரள எல்லையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பு

தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் நேற்று புளியரை கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தென்காசி தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன் கூறியதாவது:-

தமிழக-கேரள எல்லையில் உள்ள செங்கோட்டை ஒன்றிய கிராமங்களில் இருந்து நாங்கள் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்குகிறோம். ராகுல் காந்தியை பிரதமராகவும், ஸ்டாலினை தமிழக முதல்-அமைச்சராகவும் ஆட்சியில் அமர வைக்க நடைபெறும் நிச்சயதார்த்தமே இந்த தேர்தல். இந்த தொகுதியில் நமது வேட்பாளர் தனுஷ்குமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். என்றார்.

கட்சியினர்

வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர்ஷெரிப், மாவட்ட துணை செயலாளர் பேபி ரசப் பாத்திமா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவிசங்கர், துரை என்ற ராமையா, செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேக்தாவூது, வர்த்தக அணி வளன் அரசு, மாவட்ட இளைஞரணி ஹக்கீம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் உள்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story