அரக்கோணத்தில் பயங்கரம் போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை 4 பேர் கைது


அரக்கோணத்தில் பயங்கரம் போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 March 2019 4:00 AM IST (Updated: 30 March 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் போதையில் மது அருந்தியவர்களிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே முதூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகன்கள் புவனேஷ் (வயது 22), விக்னேஷ் (19). இவர்கள் பழனிப்பேட்டையில் உள்ள அவர்களது பாட்டி வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் பழனிப்பேட்டையில் உள்ள வீட்டின் அருகே நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். போதை தலைக்கேறியதில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் விக்னேசை தாக்கி உள்ளனர். விக்னேசின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது அண்ணன் புவனேஷ் அவர்களை தட்டிக் கேட்டு உள்ளார்.

அப்போது அந்த கும்பல் புவனேஷ் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட புவனேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் விசாரணை நடத்தி கொலைக்கு காரணமானதாக கூறப்படும் பழனிபேட்டையை சேர்ந்த பாஸ்கர் (24), சதீஷ் (24), ரூபன் (19) மற்றும் 15 வயது சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story