பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் புகார்: பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது சட்ட நடவடிக்கை மகளிர் ஆணையத்தில் காங்கிரஸ் மனு
பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் புகார் கூறிய விஷயத்தில் பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் ஆணையத்தில் காங்கிரஸ் மனு வழங்கியது.
பெங்களூரு,
பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் புகார் கூறிய விஷயத்தில் பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் ஆணையத்தில் காங்கிரஸ் மனு வழங்கியது.
பாதிப்புகளை அனுபவித்துள்ளனர்
பெங்களூரு தெற்கு தொகுதியில் 28 வயதே ஆன தேஜஸ்வி சூர்யா, பா.ஜனதா சார்பில் போட்டியிட்டுகிறார். அவர் வேட்பாளராக அறிவித்த உடனேயே, பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டார்.
அதில், “வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவின் கைகளில் நான் சிக்கி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன். என்னை போன்று பல்வேறு பெண்கள் இந்த பாதிப்புகளை அனுபவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
முடிவை மதிக்கிறேன்
இந்த கருத்துகள் வெளியான உடனே, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது பா.ஜனதாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது. அடுத்த சில மணி நேரங்களில் அந்த பெண், அந்த பதிவுகளை நீக்கினார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த தேஜஸ்வி சூர்யா, என்னை பற்றி சில கருத்துகளை வெளியிட்ட அந்த பெண், தனது பதிவுகளை டுவிட்டரில் இருந்து நீக்கியுள்ளார். அவரது இந்த முடிவை நான் மதிக்கிறேன். அதனால் இதுபற்றி கருத்து கூறமாட்டேன்” என்றார்.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில் இதுகுறித்து மாநில மகளிர் ஆணையத்தில் கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்பா அமர்நாத் மனு அளித்துள்ளார்.
அதில், “ஒரு பெண், பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் அந்த வேட்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கு நேர்ந்த பாதிப்புகளை வெளியிட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story