பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 19 வேட்பாளர்கள் போட்டி சின்னங்கள் ஒதுக்கீடு


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 19 வேட்பாளர்கள் போட்டி சின்னங்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 29 March 2019 11:15 PM GMT (Updated: 29 March 2019 9:25 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 19 வேட்பாளர் களுக்கு சின்னங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி சாந்தா ஒதுக் கீடு செய்து உத்தர விட்டார்.

பெரம்பலூர், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளது. தேர் தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி, 26-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய் திருந்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளன்று சரியான நேரத்தில் வராததாலும், வேட்பாளரின் ஆவணங்கள் முறையாக இல்லையென்று கூறி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார் வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரி வாங்காமல், நிராகரித்து விட்டார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 41 வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனையில் 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, தகுதியுடைய அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி, இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எம்.ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கே.சாந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஆர்.முத்துலட்சுமி உள்பட மொத்தம் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் நேற்று மதியம் 3 மணி வரை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த வேட்பாளர் களும் வேட்பு மனுக் களை வாபஸ் பெற வில்லை.

இந்நிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை சேர்ந்த 4 வேட்பாளர்களுக்கும், 12 சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சாந்தா ஒதுக்கீடு செய்தார். அதன்படி பதிவு செய்யாத, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்திக்கு கரும்பு விவசாயி சின்னமும், எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எம்.ராஜசேகரனுக்கு விசில் சின்னமும், தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் எஸ்.வினோத்குமாருக்கு மோதிரம் சின்னமும், உழைப்பாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஏ.செந்தில்வேலுக்கு தொப்பி சின்னமும் ஒதுக்கினார்.

சுயேச்சை வேட்பாளர்களான டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ராஜசேகரனுக்கு பரிசுப்பெட்டி, டி.ஜாவீத் உசேனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா, வி.அண்ணாதுரைக்கு பிரஷர் குக்கர், பி.ஆனந்தராஜூக்கு வளையல்கள், எஸ்.சபாபதிக்கு கணக்கீடும் கருவியான கால்குலேட்டர், டி.ராஜசேகரனுக்கு பெஞ்சு, கே.சுரேசுக்கு சாவி, எம்.கருப்பையாவுக்கு கிரிக்கெட் மட்டை, பி.முருகனுக்கு தீப்பெட்டி, பி.பச்சமுத்துவுக்கு குளிர்சாதன பெட்டி (ஏ.சி.), ஜெ.வின்சென்ட் மெல்போனுக்கு பலூன், என்.உத்தமசெல்வனுக்கு அலமாரி ஆகியவைகளை சின்னங்களாக ஒதுக்கீடு செய்து தேர்தல் அதிகாரி சாந்தா உத்தரவிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியரும், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி மற்றும் பதிவு செய்யாத அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட் பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Next Story