திருக்கோவிலூர் அருகே, பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - சிறுவனுக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள ஆலூர் பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவள் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியை வீட்டின் பின்புறம் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர், அருகில் உள்ள கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த மாணவியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story