அ.தி.மு.க. ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
அ.தி.மு.க. ஆட்சியில்தான் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார். இது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த கொலைகளையும், கொள்ளைகளையும், நில அபகரிப்புகளையும் பட்டியலிட்டால் ஒரு நாள் பத்தாது. தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, அ.தி.மு.க. பொறுப்பேற்றதில் இருந்து தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
மதுரையில் பேசிய ஸ்டாலின், பொய்யுரைகளை அவிழ்த்து விட்டு பேசும் போது சில உண்மைகளையும் பேசினார். அதாவது கண்ணகி போல் நீதியின் வழியில் மோடி ஆட்சி செய்து வருகிறார் என்று பேசினார். உண்மையை உரக்க சொன்ன அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின்போது அ.தி.மு.க. மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story