ஆரல்வாய்மொழி அருகே, கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை
ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லையால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே கண்ணன்புதூர், பட்டர்குளம்காலனியை சேர்ந்தவர் கதிர்வேல் குமார் (வயது 43). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு இரும்பு கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கதிர்வேல் குமார் குடும்ப செலவை எதிர்கொள்ள பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கினார். ஆனால், வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், கடந்த சில தினங்களாக கதிர்வேல் குமார் மனமுடைந்து காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதிர்வேல் குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த மனைவி திரும்ப வந்த போது, கதிர்வேல் குமார் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த கதிர்வேல் குமாருக்கு ஜீவா (39) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர
Related Tags :
Next Story