பஞ்சாப்பில் இருந்து சின்னசேலத்துக்கு சரக்கு ரெயிலில் 2,624 டன் அரிசி வந்தது


பஞ்சாப்பில் இருந்து சின்னசேலத்துக்கு சரக்கு ரெயிலில் 2,624 டன் அரிசி வந்தது
x
தினத்தந்தி 31 March 2019 4:00 AM IST (Updated: 30 March 2019 9:49 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 2,624 டன் அரிசி வந்தது.

சின்னசேலம், 

தமிழக அரசு பொதுவினியோக திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறது.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் மால்சியான்சாக்கோடு பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,624 டன் பச்சரிசி, 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலம் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது.

இந்த அரிசி மூட்டைகளை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாளர் சீனிவாசகம், இந்திய உணவு கழக மேலாளர் வசந்தா, ஒப்பந்ததாரர் தியாகராஜன், ரெயில்வே நிலைய அதிகாரி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் இருந்து இறக்கி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் ஏற்றி சின்னசேலம் கூகையூர் சாலையில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்று இறக்கி பாதுகாப்பாக வைத்தனர்.

பின்னர் பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story