விருத்தாசலத்தில் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரெயில்வே போலீசார் வழங்கினர்


விருத்தாசலத்தில் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரெயில்வே போலீசார் வழங்கினர்
x
தினத்தந்தி 31 March 2019 4:45 AM IST (Updated: 30 March 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரெயில்வே போலீசார் வழங்கினர்.

விருத்தாசலம், 

ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ஜெகநாதன் உத்தரவின் பேரில் பாதுகாப்பான ரெயில் பயணம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமை தாங்கி ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அந்த வழியாக வந்த ரெயிலில் இருந்த பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அந்த துண்டு பிரசுரத்தில், பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக இருக்கையின் கீழ் பகுதியில் பூட்டி வைக்க வேண்டும், அறிமுகமில்லாதவர்கள் தரும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடக்கூடாது, ஜன்னல் அருகில் நகைகள் தெரியும்படி அமரக்கூடாது, கேட்பாரற்று கிடக்கும் பொருட்கள் குறித்து அருகில் உள்ள பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது.

செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க கூடாது. நடை மேடையை மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஆபத்தான நேரங்களில் 182 என்ற இலவச எண்ணில் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவினரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ரெயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story