கிருஷ்ணகிரி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை பொது பார்வையாளர் ஆய்வு


கிருஷ்ணகிரி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை பொது பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 31 March 2019 4:00 AM IST (Updated: 30 March 2019 11:34 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற தேர்தல், ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் கல்யாண் சந்த் ஷமன் மற்றும் கலெக்டர் பிரபாகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு அரண்கள், இருப்பு அறைகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு பெட்டக அறை ஆகியவற்றை தேர்தல் பொது பார்வையாளர் பார்வையிட்டார். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கணக்கீட்டு குழு, வீடியோ கண்காணிப்புக்குழு, மீடியா மையம் மற்றும் ஊடக சான்று மையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கணக்கீட்டு குழு மேற்கொண்டு வரும் வேட்பாளர் நிழல் பதிவேடு, செலவினம் ஆவணம் குறித்தும், நிலையான குழு கண்காணித்து வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டங்கள் பதிவு செய்யப்பட்ட வீடியோ, வேட்பாளர்கள் தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் செலவினம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, தாசில்தார்கள் மிருளாழினி, பாலசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story