தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு கண்காணிப்பு செயலி குறித்த பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது


தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு கண்காணிப்பு செயலி குறித்த பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 31 March 2019 3:45 AM IST (Updated: 31 March 2019 12:10 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு கண்காணிப்பு செயலி குறித்த பயிற்சி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல், ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் கண்காணிப்பு மொபைல் செயலி குறித்த பயிற்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான டாக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

மேலும் அவர் மொபைல் செயலி குறித்து மண்டல அலுவலர்களுக்கு செயல் விளக்கம் அளித்து பேசினார்.

இதில் தேர்தல் நாள் அன்று மொபைல் செயலி மூலமாக வாக்குச்சாவடி நிலவரங்கள், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, கண்காணிப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சிகளை மாவட்ட தகவலியல் அலுவலர் சாதிக் அலி மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த பயிற்சியில் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் மற்றும், நாடாளுமன்ற தேர்தலுக்கான 174 அலுவலர்கள் மற்றும் ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 34 அலுவலர்கள் என மொத்தம் 208 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story