கொரடாச்சேரி, குடவாசலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் காமராஜ் தீவிர பிரசாரம்


கொரடாச்சேரி, குடவாசலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் காமராஜ் தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 31 March 2019 4:15 AM IST (Updated: 31 March 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் காமராஜ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கொரடாச்சேரி,

அ.தி.மு.க. சார்பில் திருவாரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தாழை.சரவணன் ஆகியோரை ஆதரித்து கொரடாச்சேரி, குடவாசல், காப்பணாமங்கலம், அரசவனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் காமராஜ் இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காப்பணாமங்கலத்தில் நடந்த பிரசாரத்தின்போது வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்களை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் காமராஜ் கூறியதாவது:–

முன்னாள் முதல்–அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் வழியில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


கொரடாச்சேரி ஒன்றியத்தில் அம்மையப்பன், மணக்கால், அய்யம்பேட்டை, செல்லூர், எருக்காட்டூர், எண்கண், காட்டூர் ஆகிய 7 இடங்களில் ரூ.1 கோடியே 52 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவமனைகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

ஒன்றியத்தில் ரூ.6 கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தொடர அ.தி.மு.க. வேட்பாளர்களான முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், தாழை.சரவணன் ஆகியோரை வெற்றிபெற செய்ய வேண்டும்

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பிரசாரத்தின்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் பாப்பா.சுப்பிரமணியன், சேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story