அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நாமக்கல்லில் நடந்தது
அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நாமக்கல்லில் நடந்தது.
நாமக்கல்,
நாடாளுமன்ற தேர்தலில் தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஆசியா மரியம், தேர்தல் பொது பார்வையாளர் வாணி மோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் திருச்செங்கோடு சாலை, நல்லிப்பாளையம் வழியாக நாமக்கல் நகராட்சி அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது.
இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு மூன்று சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப்-கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், நாமக்கல் தாசில்தார் சுப்பிரமணியம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வராஜ், தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story