நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க தேர்தல் அலுவலகம் திறப்பு வேட்பாளர் மனோஜ் பாண்டியன் ஆதரவு திரட்டினார்


நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க தேர்தல் அலுவலகம் திறப்பு வேட்பாளர் மனோஜ் பாண்டியன் ஆதரவு திரட்டினார்
x
தினத்தந்தி 31 March 2019 3:30 AM IST (Updated: 31 March 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்கு சேகரித்தார்.

அம்பை, 

அம்பையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் அலுவலகம் திறப்பு

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா அம்பை-பாபநாசம் மெயின் ரோட்டில் திலகர்புரம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தை அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான முருகையா பாண்டியன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் அப்பகுதியில் தீவிர பிரசாரம் செய்து, இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையம், பூந்தோட்ட தெரு, சந்தன மாரியம்மன் கோவில், கொட்டாரம், மேலரதவீதி, சன்னதிதெரு, கட்டப்புளி தெரு, டாணா, அருணாசலபுரம், பசுக்கிடைவிளை, கருத்தையாபுரம், அகஸ்தியர்புரம், முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, அய்யனார்குளம் சென்றார். அதனை தொடர்ந்து மாலையில் அகஸ்தியர்பட்டி, அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, சிவந்திபுரம், புலவன்பட்டி ஆகிய ஊர்களில் அவர் வாக்கு சேகரித்தார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல் முருகன், தர்மலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் செவல் முத்துசாமி, பார்வதி பாக்கியம், நகர செயலாளர்கள் அறிவழகன், கண்ணன், இளைஞர் பாசறை மாவட்ட இணை செயலாளர் வெங்கட்ராமன், கூட்டுறவு துணை தலைவர் பிராங்களின், பஸ்நிறுத்த வியாபாரிகள் சங்க தலைவர் விஜயபாலாஜி, தே.மு.தி.க. நகர செயலாளர்கள் விஜய், இசக்கிராஜ், தொகுதி பொறுப்பாளர் அய்யப்பன், த.மா.கா. மாவட்ட தலைவர் ஜோதி, அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, ஆவின் துணை தலைவர் கணபதி மற்றும் அருண் இசக்கிமுத்து, அசோக், மீனாட்சி, சிவந்திபுரம் ஸ்டீபன் முத்தையா உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story