நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
பிளஸ்-2 விடைத்தாள்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த 1-ந் தேதி தொடங்கி, 19-ந் தேதி முடிவடைந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் கல்வி மாவட்ட வாரியாக விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு வருவாய் மாவட்டம் வாரியாக விடைத்தாள் திருத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் அருகே ராம்நகர் ரோஸ்மேரி மெட்ரிக்குலேசன் பள்ளி, தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா அறிவுரைபடி கல்வி மாவட்ட அலுவலர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணித்து வருகிறார்கள். வருகிற 11-ந் தேதிக்குள் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.சி.
எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பாளையங்கோட்டை சின்மய வித்யாலயா, தென்காசி ஐ.சி.ஐ. அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் விடைத்தாள் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 13-ந் தேதிக்குள் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story