அரசு பள்ளிகளில் ஆண்டு விழா


அரசு பள்ளிகளில் ஆண்டு விழா
x
தினத்தந்தி 31 March 2019 4:00 AM IST (Updated: 31 March 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடை பெற்றது.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சம்பூர்ணம் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழரசன் வரவேற்றார்.

வேப்பூர் வட்டாரக்கல்வி அலுவலர் ஜீவரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்டுவிழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். தொடர்ந்து ஆசிரிய பயிற்றுனர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். இதையடுத்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியை சந்திரா நன்றி கூறினார்.

இதேபோல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா இடையக்குறிச்சி (மேற்கு) கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலர் மதியழகன் தலைமை தாங்கினார். பெற்றறோர் ஆசிரியர் கழக தலைவர் சேகர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜகோகுலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் வரதராஜன் வரவேற்று பேசினார்.

இடைநிலை ஆசிரியர் பிரான்சிஸ்கா ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார கல்வி அலுவலர் நீலமேகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சங்கர், ஆசிரியர் பயிற்றுனர் அருமைராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் உதவி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியர் கலைஞானக்கதிர் நன்றி கூறினார். 

Next Story