அம்பை பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர வாக்கு சேகரிப்பு
அம்பை பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அம்பை,
அம்பை பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பு
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய பகுதிகளான வெள்ளாங்குழி, தெற்கு பாப்பான்குளம், வைராவிகுளம், சிங்கம்பட்டி, மணிமுத்தாறு நகரம், கீழ ஏர்மாள்புரம், ஆலடியூர், செட்டிமேடு, வேம்பையாபுரம், மில்கேட் ஆகிய பகுதிகளில் நேற்று காலை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் திறந்த ஜீப்பில் வீதிவீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விவசாய கடன் தள்ளுபடி
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான். நானும் ஒரு விவசாயி தான். விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை நான் அறிவேன். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். அதேபோன்று தற்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டு உள்ளது. தற்போதும் விவசாய கடன்கள் தள்ளுபடியாக தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரணி சேகர், மணிமுத்தாறு நகர செயலாளர் மாரியப்பன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலசந்தர், காங்கிரஸ் வட்டார தலைவர் சங்கரநாராயணன் மற்றும் தி.மு.க.வினர், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story