விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு


விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 31 March 2019 3:30 AM IST (Updated: 31 March 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சுப்பிரமணியன், தேர்தல் பொது பார்வையாளர் மொகீந்தர்பால் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த மையத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்றும் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சப்-கலெக்டர்கள் சாருஸ்ரீ, மெர்சிரம்யா, கோட்டாட்சியர் குமாரவேல், தாசில்தார் பிரபுவெங்கடேஸ்வரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story