புதிய வாக்காளர்களுக்கு இ-சேவை மையத்தில் அடையாள அட்டை வழங்கக்கோரி மனு


புதிய வாக்காளர்களுக்கு இ-சேவை மையத்தில் அடையாள அட்டை வழங்கக்கோரி மனு
x
தினத்தந்தி 31 March 2019 3:30 AM IST (Updated: 31 March 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

புதிய வாக்காளர்கள் இ-சேவை மையத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

புதுக்கோட்டை,

தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது புதுக்கோட்டை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான தண்டாயுதபாணியிடம் மனு அளித்தார். அந்த மனுவில், சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ள வாக்காளர் துணை பட்டியலில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச்சாவடி அலுவலர் மூலம் உடனடியாக வழங்க வேண்டும். இதேபோல் தற்போது வெளியிட உள்ள துணை பட்டியலையும், உடனடியாக வெளியிட்டு, அதற்குரிய வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வழங்க வேண்டும். இவ்வாறு அடையாள அட்டையை வழங்க முடியாத நிலையில், ரூ.25 செலுத்தி வாக்காளர்கள் இ-சேவை மையத்தில் அடையாள அட்டையை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது புதிய வாக்காளர்களுக்கு இ-சேவை மையத்தில் ரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற முடியவில்லை. எனவே புதிய வாக்காளர்கள் இ-சேவை மையத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

Next Story