தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பொது பார்வையாளர் ஆய்வு வேட்பாளர்களின் செலவினங்கள் குறித்து கேட்டறிந்தார்


தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பொது பார்வையாளர் ஆய்வு வேட்பாளர்களின் செலவினங்கள் குறித்து கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 31 March 2019 4:30 AM IST (Updated: 31 March 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

கரூர் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பொதுபார்வையாளர் ஆய்வு செய்து, வேட்பாளர்களின் செலவினங்கள் குறித்து கேட்டறிந்தார்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலி்ல் உள்ளதால் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு, ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கும் குழு, கணக்கீட்டுக்குழு என பல்வேறு குழுவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொதுபார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாந்த்குமார் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பழகன் ஆகியோர் நேற்று 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை, பறக்கும் படை மற்றும் நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினரின் வாகனங்களை ஜி.பி.எஸ்.கருவி மூலம் கண்காணிக்கும் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 18004252507 மற்றும் 1950 ஆகிய எண்களில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள புகார்களின் எண்ணிக்கை, அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை தேர்தல் பொதுபார்வையாளர் ஆய்வு செய்தார். பின்னர் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்து கண்காணிக்கப்படும் கணக்குப்பிரிவில் தேர்தல் செலவினங்கள் எவ்வாறெல்லாம் கண்காணிக்கப்்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகின்றது என்பது குறித்தும் தேர்தல் பொதுப் பார்வையாளர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, துணை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான சூர்யபிகராஷ், மாவட்ட வருவாய் அதிகாரி (நிலமெடுப்பு) சிவப்பிரியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story