நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற செய்தால் ரூ.5 லட்சம் தருவதாக கூறிய பா.ஜனதா தலைவர் மீது வழக்கு
நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை வெற்றிபெற செய்தால் ரூ.5 லட்சம் தருவோம் என்று கூறிய பா.ஜனதா மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை வெற்றிபெற செய்தால் ரூ.5 லட்சம் தருவோம் என்று கூறிய பா.ஜனதா மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சர்ச்சை பேச்சு
சாங்கிலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக சஞ்சய்காகா பாட்டீல் எம்.பி. போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த சாங்கிலி மாவட்ட பா.ஜனதா தலைவர் பிரிதிவிராஜ் தேஷ்முக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரசாரத்தின் போது பிரிதிவிராஜ் தேஷ்முக்கிடம், கூட்டத்தில் இருந்த ஒருவர் சஞ்ஜய்காகா பாட்டீல் மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன தருவீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் “உங்களுக்கு ரூ. 5 லட்சமோ அல்லது அதற்கு மேலோ கிடைக்கும்” என கூறினார்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட பிரிதிவிராஜ் தேஷ்முக் அடுத்த நொடியே தான் நகைச்சுவையாக அப்படி குறிப்பிட்டதாக தெரிவித்து தனது பேச்சை தொடர்ந்தார்.
வழக்கு
ஆனால் அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும் தேர்தல் கமிஷனில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வாக்காளருக்கு பணம் தருவதாக கூறிய பிரிதிவிராஜ் தேஷ்முக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வினி குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story