ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அதிகாரி அறைக்கு கமிஷனர் பூட்டு போட்டதால் பரபரப்பு
ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அதிகாரி அறைக்கு கமிஷனர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஊட்டி நகராட்சி அலுவலகம் பழமை வாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. நகராட்சி கமிஷனர், மேலாளர், கணக்குப்பிரிவு அலுவலர் உள்ளிட்டவர்களின் அலுவலகங்கள் பாரம்பரிய கட்டிடத்தில் இயங்குகின்றன. அதோடு இணைந்த புதிய கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் மேல்தளத்தில் நகராட்சி பொறியாளர் அலுவலகம், நகரமைப்பு அலுவலகம் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி கமிஷனர் சத்தார் மாறுதலாகி சென்ற பிறகு நகராட்சி கமிஷனர் அலுவலக அறையை பொறுப்பு அதிகாரிகள் பயன்படுத்தாமல் இருந்தனர். புதிய கட்டிடத்தில் இருந்த தனி அலுவலர் அறையை மட்டும் பயன்படுத்தி வந்தனர். தற்போது நகராட்சி கமிஷனராக நாராயணன் பொறுப்பேற்ற பிறகு, அந்த அலுவலக அறை பயன்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் நகரமைப்பு அதிகாரி இளங்கோவன் பயன்படுத்தி வந்த அறையை நகராட்சி கமிஷனர் நாராயணன் திடீரென பூட்டு போட்டு பூட்டினார். ஊட்டியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களில் சீல் வைத்தல், அகற்றுதல் போன்ற நடவடிக்கை தொடர்பாக நகராட்சி கமிஷனருக்கும், நகரமைப்பு அதிகாரிக்கும் இடையே பனி போர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நகரமைப்பு அதிகாரி பயன்படுத்தி வந்த அறையை கமிஷனர் பூட்டி உள்ளார். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அந்த அறையில் கோப்புகள் இருந்ததாக கூறியதன் பேரில், அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மீண்டும் நகராட்சி கமிஷனர் அந்த அறையை பூட்டினார்.
இதுகுறித்து நகரமைப்பு அதிகாரி இளங்கோவன் கூறும்போது, நான் பயன்படுத்தி வந்த அறையை நகராட்சி கமிஷனர் பூட்டு போட்டு பூட்டினார். தற்போது எனக்கு தனி அறை இல்லை என்றார். நகராட்சி கமிஷனர் நாராயணன் கூறும்போது, பூட்டு போடப்பட்ட அறை நகராட்சியின் தனி அலுவலரின் அறை ஆகும். நகரமைப்பு பிரிவு அலுவலகம் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, இதுகுறித்து திருப்பூரில் உள்ள மண்டல இயக்குனர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தெரிவித்து உள்ளேன் என்றார். ஊட்டி நகர பொதுமக்கள் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி வாங்க முடியாது. இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகளுக்கு இடையே பணி போர் காரணமாக அலுவலக அறையை பூட்டி இருப்பது மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நகராட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story