பாளையங்கோட்டையில் தேர்தல் பிரசாரம்: “குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால திட்டத்தை விரைவுபடுத்துவேன்” தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பேச்சு
குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால திட்டத்தை விரைவுபடுத்துவேன் என பாளையங்கோட்டையில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தெரிவித்தார்.
நெல்லை,
குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால திட்டத்தை விரைவுபடுத்துவேன் என பாளையங்கோட்டையில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தெரிவித்தார்.
வேட்பாளர் ஞானதிரவியம்
நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் தனது பிரசாரத்தை பொட்டல் பகுதியில் இருந்து தொடங்கி, கோட்டூர், திம்மராஜபுரம், சாந்திநகர், பாளையங்கோட்டை மார்க்கெட், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அவர் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்று உதய சூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின் போது, வேட்பாளர் ஞானதிரவியம் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி காலத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுவது பாளையங்கோட்டை ஆகும். இங்கு படித்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஏராளமான கல்வி நிறுவனங்களும் உள்ளன.
பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கல்லூரியில், அரிய வகையான மூலிகைகள் உள்ளன. எனவே பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் கொண்டு வர முயற்சி செய்வேன். மேலும் மதுரை-கன்னியாகுமரி இரட்டை ரெயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்துவேன்.
ரெயில்வே மேம்பாலம்
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே போகிறது. எனவே மேம்பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. தேர்தல் பார்வையாளர் ரவீந்திரன், மத்திய மாவட்ட செயலாளர் வகாப், லட்சுமணன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன், நெல்லை கிழக்கு மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் தவசிராஜன், மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவந்திபுரத்தில் பிரசாரம்
முன்னதாக அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவந்திபுரம் கஸ்பா, காமராஜ்நகர், புலவன்பட்டி, வெயிலுமுத்தன்பட்டி, அம்பலவாணபுரம், வரகாபுரம், ஆறுமுகம்பட்டி, அடையகருங்குளம், அகஸ்தியர்பட்டி, பொன்நகர், அயன்திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், மன்னார்கோவில், வாகைகுளம் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் ஞானதிரவியம் வாக்கு சேகரித்தார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரணிசேகர், வர்த்தக அணி ஆட்டோ சேகர், சிவந்திபுரம் ஊராட்சி செயலாளர் செல்வம், காங்கிரஸ் மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் துரை, அம்பை தெற்கு வட்டார தலைவர் சங்கரநாராயணன், வடக்கு வட்டார தலைவர் சண்முககுட்டி, ஊடக பிரிவு பெருமாள், சிவந்திபுரம் கிராம காங்கிரஸ் தலைவர் செல்வம் மற்றும் சங்கரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பீமாராவ், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், அம்பை கிளை செயலாளர் வடிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், சுரேஷ், கணபதி, இசக்கிராஜ், ம.தி.மு.க. சார்பில் சிவந்திபுரம் சாம்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story