வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
ஆவுடையார்கோவில்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது அவர் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மீமிசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களில் அமைய உள்ள வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள குடிநீர்வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளையும் மற்றும் வாக்குச்சாவடி பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தாசில்தார் ஜமுனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story