தோகைமலை ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை சார்பாக தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்
தோகைமலை ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தோகைமலை,
தோகைமலை ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருஞானம் தொடங்கி வைத்தார். தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மணப்பாறை- குளித்தலை மெயின் ரோடு, பஸ் நிலையம், கடைவீதி, கருப்பகோவில் தெரு வழியாக துணை சுகாதார மையம் வரை சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், மகளிர்திட்ட கள ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய மேலாளர் ருக்குமணி, ஒன்றிய பணியாளர் ரமேஷ், ஊராட்சிமன்ற செயலாளர் இளங்கோவன் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story