பர்பானியில் சிவசேனா கவுன்சிலர் வெட்டிக்கொலை நண்பர்கள் 2 பேர் போலீசில் சரண்


பர்பானியில் சிவசேனா கவுன்சிலர் வெட்டிக்கொலை நண்பர்கள் 2 பேர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 1 April 2019 5:00 AM IST (Updated: 1 April 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

பர்பானியில் சிவசேனா கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

புனே, 

பர்பானியில் சிவசேனா கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

கவுன்சிலர்

பர்பானியை சேர்ந்தவர் அமர்தீப் ரோடே. இவர் பர்பானி மாநகராட்சியில் சிவசேனா கவுன்சிலராக இருந்தார். இந்தநிலையில், அங்குள்ள ஒரு பொது குடிநீர் குழாயில் தண்ணீர் குறைவாக வருவதாக அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் அமர்தீப் ரோடேயிடம் வந்து முறையிட்டனர். உடனே அவர் அங்கு சென்று பார்த்தார்.

அப்போது, அந்த குடிநீர் குழாய் அருகில் பெரிய பள்ளம் தோண்டியிருந்ததை பார்த்தார். அந்த பள்ளத்தை அவரது நண்பர் ரவி கெய்க்வாட் என்பவர் தோண்டியிருந்தது தெரியவந்தது.

வெட்டி கொலை

இதனால் கோபம் அடைந்த அவர் உடனே ரவி கெய்க்வாட்டிடம் இதுபற்றி கேட்டார். அப்போது இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை உண்டானது. இதில் கோபம் அடைந்த அமர்தீப் ரோடே அங்கு கிடந்த ஒரு கோடரியை எடுத்து ரவி கெய்க்வாட்டை வெட்ட முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது இன்னொரு நண்பர் கிரன் டாகே அவரை தடுத்தார். அப்போது அந்த கோடரியை ரவி கெய்க்வாட் பிடுங்கி அமர்தீப் ரோடேயை சரமாரியாக வெட்டினார்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் ரவி கெய்க்வாட், கிரன் டாகே இருவரும் சேர்ந்து கற்கள் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அமர்தீப் ரோடே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

போலீஸ் விசாரணை

பின்னர் கொலையாளிகள் இருவரும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு சென்று அமர்தீப் ரோடேயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவசேனா கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பர்பானியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Next Story