பாந்திரா ரெயில் நிலைய பிளாட்பார உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் தண்ணீர் பாட்டிலில் எலி ஏறியதால் நடவடிக்கை

பாந்திரா ரெயில் நிலைய பிளாட்பார உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் தண்ணீர் பாட்டிலில் எலி ஏறியதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 April 2019 4:00 AM IST (Updated: 1 April 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

பாந்திரா ரெயில் நிலைய பிளாட்பார உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டிலில் எலி ஏறி நிற்கும் வீடியோ வெளியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை,

பாந்திரா ரெயில் நிலைய பிளாட்பார உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டிலில் எலி ஏறி நிற்கும் வீடியோ வெளியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவகத்துக்கு சீல்

மத்திய ரெயில்வே வழித்தடத்தின் மும்பை குர்லா ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார உணவகத்தில் தொழிலாளி ஒருவர் சுகாதாரமற்ற முறையில் லெமன் ஜூஸ் தயார் செய்வதை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து மத்திய ரெயில்வே டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத்திய ரெயில்வே அதிகாரிகள் அந்த பிளாட்பார உணவகத்துக்கு அதிரடியாக சீல் வைத்து மூடினர்.

தண்ணீர் பாட்டில் மீது எலி

இந்தநிலையில், மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள பாந்திரா ரெயில் நிலையத்தின் இரண்டாம் எண் பிளாட்பாரத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் கண்ணாடி பெட்டியில் உள்ள தண்ணீர் பாட்டில் மீது எலி ஒன்று ஏறி இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக அந்த உணவகத்துக்கு மேற்கு ரெயில்வே ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.

Next Story