வாலிபருடன் பழகியதால் ஆத்திரம் மகளை கொன்று உடலை தீ வைத்து எரித்த தந்தை கைது உடந்தையாக இருந்த உறவினர்கள் 2 பேரும் சிக்கினர்
வாலிபருடன் பழகியதால் மகளை கொலை செய்து உடலை தீ வைத்து எரித்த தந்தை கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அகமத்நகர்,
வாலிபருடன் பழகியதால் மகளை கொலை செய்து உடலை தீ வைத்து எரித்த தந்தை கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவி
அகமத்நகர் மாவட்டம் சோந்தி கிராமத்தை சேர்ந்த 17 வயது பெண் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் மாணவி வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது. செல்போனில் அவருடன் எப்போது பேசுவதுடன், அவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
இது பெண்ணின் தந்தை பாண்டுரங் சாய்குண்டே(வயது51) வுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவியை பலமுறை கண்டித்தார்.
இருப்பினும் வாலிபருடனான நட்பை மாணவி விடவில்லை. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி மாணவிக்கும் அவரின் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் தலைக்கேறிய பாண்டுரங் சாய்குண்டே மகள் என்றும் பாராமல் மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
போலீசில் புகார்
பின்னர் கொலையை மறைக்க திட்டமிட்ட அவர் உறவினர்களான ஜகன்நாத் ஷிண்டே(30) மற்றும் தயாந்த்தேவ் ஷிண்டே(35) ஆகியோரின் உதவியுடன் மாணவியின் உடலை எரித்து அருகில் உள்ள நீர்நிலை அருகே வீசினார்.
மேலும் தனது மகள் காணாமல் போய்விட்டதாக போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த 25-ந்தேதி மாணவியின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தந்தையே மகளை கொடூரமாக கொன்றுவிட்டு நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மாணவியின் தந்தை பாண்டுரங் சாய்குண்டே மற்றும் அவருக்கு உதவிய உறவினர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story