ஆரணி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு


ஆரணி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 2 April 2019 4:00 AM IST (Updated: 1 April 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆரணி, 

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரணி சட்டமன்ற தொகுதியில் 12 இடங்களில் 30 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள முகமதுசாதிக்ஹலால், காவல்துறை தேர்தல் பார்வையாளர் ராகுல்கட்டாக்கே ஆகியோர் நேற்று பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள 3 வாக்குச்சாவடி மையங்களை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு, துப்பாக்கி ஏந்திய போலீசார் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆரணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இல.மைதிலியிடம் அறிவுறுத்தினர்.

அப்போது தாசில்தார் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி, வட்ட வழங்கல் அலுவலர் மணி, ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு இ.செந்தில், இன்ஸ்பெக்டர்கள் பாரதி, விநாயகமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இருந்தனர்.

Next Story