பாங்க் ஆப் பரோடாவுடன் இணைப்பு: விஜயா, தேனா வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையில் பாதிப்பு ஏற்படாது வங்கி மண்டல தலைவர் தகவல்
விஜயா மற்றும் தேனா வங்கிகள் பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் நேற்று முதல் இணைக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வங்கியின் மண்டலத்தலைவர் தெரிவித்தார்.
மதுரை,
விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நேற்று முதல் பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதுகுறித்து பாங்க் ஆப் பரோடா வங்கியின் மண்டல தலைவர் சுதாகரன் மற்றும் துணைத்தலைவர் முருகையா ஆகியோர் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட பாங்க் ஆப் பரோடா வங்கி தற்போது, தேனா மற்றும் விஜயா வங்கியுடன் இணைந்துள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் எங்களது வங்கிக்கு 9,500-க்கும் மேற்பட்ட கிளைகளும், 13,400 ஏ.டி.எம்.களும், 1,400 இ-வங்கி சேவை மையங்களும் கிடைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகவும், 2-வது பெரிய வங்கியாகவும் பாங்க் ஆப் பரோடா வங்கி மாறியுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் 9 சதவீதம் பேரை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. 6.3 சதவீத வங்கி கிளைகள் பரோடா வங்கியிடம் உள்ளன. பாங்க் ஆப் பரோடா வங்கியின் சர்வதேச கிளை சேவைகளையும் விரைவில் பெறமுடியும். உலகம் முழுவதிலும் 21 நாடுகளில் 101 கிளைகளை கொண்டுள்ளது. பரோடா வங்கியின் மூலதனம் தற்போது உயர்ந்துள்ளதால், ரிசர்வ் வங்கி விதிப்படி, நிறைய வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியும். பரோடா வங்கியின் நிதி சேவைகள் உள்பட அனைத்து சேவைகளையும் இந்த 2 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பெற முடியும். தேனா மற்றும் விஜயா வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கு எண், ஏ.டி.எம்.கார்டு, காசோலை புத்தகம் ஆகியவற்றை மாற்றத்தேவையில்லை. வங்கிகளின் சேவைத்தரம் உயர வாய்ப்புள்ளது. வாடிக்கையாளர் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
எனவே, விஜயா மற்றும் தேனா வங்கி வாடிக்கையாளர்கள் 18 மாதங்கள் வரை தங்களது வங்கிக்கிளையில் தற்போது பெற்று வரும் சேவைகளை எந்த தடையுமின்றி பெறலாம். தொழில்நுட்ப ரீதியாக சிறிய அளவிலான இடையூறுகள் மட்டுமே ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வங்கிகளின் ஊழியர்கள் அப்படியே பாங்க் ஆப் பரோடா வங்கி ஊழியர்களாக மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்களது பணி மூப்பு மற்றும் பதவிஉயர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பழைய வங்கிகளை விட கூடுதல் சலுகைகளும் ஊழியர்களுக்கு கிடைக்கும். சர்வதேச கிளைகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பேட்டியின் போது, தேனா வங்கியின் முதுநிலை மேலாளர் பிரகாஷ், விஜயா வங்கியின் முதுநிலை கிளை மேலாளர் பிரபாகர், பாங்க் ஆப் பரோடா வங்கியின் தலைமை மேலாளர் சுதர்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story