2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 72 பேர் வேட்புமனு தாக்கல்
கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக வருகிற 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி 26-ந் தேதியுடன் நிறைவடைந்தது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. அதாவது சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, கலபுரகி, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா ஆகிய தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த 14 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (மார்ச் மாதம்) 28-ந் தேதி தொடங்கியது. இதுவரை மொத்தம் 72 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் 35 பேர் மனு தாக்கல் செய்தனர். மனுக்களை தாக்கல் செய்ய 4-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

Related Tags :
Next Story