திருவாரூர் பழைய மருத்துவமனை கட்டிடத்தில் குழந்தைகள், முதியோருக்கு சிறப்பு பிரிவு அமைச்சர் காமராஜ் உறுதி


திருவாரூர் பழைய மருத்துவமனை கட்டிடத்தில் குழந்தைகள், முதியோருக்கு சிறப்பு பிரிவு அமைச்சர் காமராஜ் உறுதி
x
தினத்தந்தி 3 April 2019 4:15 AM IST (Updated: 3 April 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் பழைய மருத்துவமனை கட்டிடத்தில் குழந்தைகள், முதியோருக்கு சிறப்பு மருத்துவ பிரிவு ஏற்படுத்தப்படும் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் காமராஜ் உறுதி அளித்தார்.

கொரடாச்சேரி,

திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விளமல், தண்டலை, சிங்களாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் காமராஜ், வேட்பாளர் ஜீவானந்தம் ஆகியோரை வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது கோபால் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பிரசாரத்தின்போது அமைச்சர் காமராஜ் கூறியதாவது:–

திருவாரூர் புதிய பஸ் நிலையத்துக்கு கூடுதல் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டு உள்ளது. திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் முன்பாக திருவாரூர் நகரில் செயல்பட்டு வந்த திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடத்தை தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்த கட்டிடத்தில் குழந்தைகள், முதியோருக்கு சிறப்பு மருத்துவ பிரிவு ஏற்படுத்தப்படும். நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த திருவாரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜீவானந்தத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.


Next Story