நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளை பொது பார்வையாளர்கள் ஆய்வு


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளை பொது பார்வையாளர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 3 April 2019 4:30 AM IST (Updated: 3 April 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளை பொது பார்வையாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் மாதிரி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரபாகர் ஆய்வு செய்து வருகிறார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர்கள் ராம்ராவ் போன்ஸ்லே, காவல் துறை பொது பார்வையாளர் யுரிந்தர் சிங் ஆகியோர் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் மாதிரி வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடியான கிருஷ்ணகிரி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தேர்தல் பொதுபார்வையாளர்கள் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் வாக்குப்பதிவு தொடர்பாக அச்சுறுத்தல், தொந்தரவு எதுவும் உள்ளதா? என கேட்டறிந்தனர்.

மேலும் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்படும். எனவே 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து தேர்தல் பார்வையாளர்கள் காந்தி ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டனர்.

மேலும் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், தாசில்தார் மிருணாளினி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story