சோளிங்கருக்கு புறவழிச்சாலை அமைத்து தரப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத் வாக்குறுதி
சோளிங்கரில் புறவழிச்சாலை அமைத்து தரப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.சம்பத் வாக்குறுதி அளித்தார்.
சோளிங்கர்,
சோளிங்கர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் நேற்று 17-ம் வார்டில் சோளிங்கர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.சம்பத் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்தார்.
மேலும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு மாம்பழ சின்னத்திலும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், சோளிங்கரை தனி தாலுகா ஆக்கப்படும். சோளிங்கருக்கு புறவழிச்சாலை அமைத்து தரப்படும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
அவருடன் சோளிங்கர் தொகுதி பொறுப்பாளர் ஏ.எல்.விஜயன், நகர செயலாளர் ராமு, பா.ம.க. மாநில சட்ட பாதுகாப்பு துணை செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன், கவுன்சிலர் மணிகண்டன், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர்.
சோளிங்கரில் நேற்று மதியம் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத்துக்கும், அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

Related Tags :
Next Story