மாரண்டஅள்ளி அருகே, பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு வலைவீச்சு
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே, பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 20). இவர் ஒரு பிளஸ்-1 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த மாணவியின் தாய்க்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் கடந்த 6 மாதங்களாக வெளியூர் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் சரவணகுமார் வீட்டுக்குள் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதனால் மாணவிக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படவே பெற்றோர் அவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்த்தனர். அப்போது மாணவி கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதுபற்றி பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சைல்டுலைன் அமைப்பினர் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story