வாலாஜா ரோடு வழியாக சென்னைக்கு ரெயில் விட நடவடிக்கை பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வாக்குறுதி


வாலாஜா ரோடு வழியாக சென்னைக்கு ரெயில் விட நடவடிக்கை பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வாக்குறுதி
x
தினத்தந்தி 3 April 2019 4:00 AM IST (Updated: 3 April 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜா ரோடு வழியாக சென்னைக்கு ரெயில் விட நடவடிக்கை என்று பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வாக்குறுதி அளித்தார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி நேற்று, வாலாஜா ரோடு ரெயில் நிலையம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தலை, புதுப்பேட்டை, தகரகுப்பம், செங்காடு, படியம்பாக்கம், வள்ளுவம்பாக்கம், முசிறி, குப்பத்தாமோட்டூர், பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், சுமைதாங்கி, திருப்பாற்கடல், கடப்பேரி, சென்னசமுத்திரம், பூண்டி, திருமலைச்சேரி, சாத்தம்பாக்கம், குடிமல்லூர், தேவதானம், வன்னிவேடு மோட்டூர், வி.சி.மோட்டூர் உள்பட வாலாஜா ஒன்றிய பகுதிகளிலும், ராணிப்பேட்டை நகர பகுதியிலும், மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

நான் மத்திய ரெயில்வே இணை மந்திரியாக இருந்தபோது டாக்டர் ராமதாசின் அறிவுரையின் பேரில் வாலாஜா ரோடு ரெயில் நிலையம் வழியாக திண்டிவனம்- நகரி ரெயிலை விட வேண்டும் என்பதற்காக சர்வே செய்ய நடவடிக்கை எடுத்தேன்.

நான் இந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் விரைவில் திண்டிவனம்- நகரிக்கு ரெயில் விட நடவடிக்கை எடுப்பேன். மேலும் ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா ரோடு வழியாக சென்னைக்கு ரெயில் விட நடவடிக்கை எடுப்பேன்.

சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் வெளியேறி பாலாற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளருடன் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முகம்மதுஜான், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, வாலாஜா ஒன்றிய செயலாளர் எம்.சி.பூங்காவனம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பூட்டுத்தாக்கு நித்யா, வாலாஜா ஒன்றிய செயலாளர் குட்டி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் தசரதன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள், பா.ம.க. முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.கே.முரளி, மாவட்ட செயலாளர் கரிகாலன், பா.ம.க.நிர்வாகிகள் உள்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story