வானவில் : ஏ.பி.எஸ். வசதியுடன் டி.வி.எஸ். அபாச்சே ஆர்.டி.ஆர்.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் பைக்கான அபாச்சே இப்போது ஏ.பி.எஸ். எனப்படும் ஆன்டி பிரேக் லாக்கிங் சிஸ்டம் வசதியோடு அறிமுகமாகியுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அபாச்சே ஆர்.டி.ஆர். 160 மாடல் மோட்டார் சைக்கிளின் விலை ரூ.85,510 ஆகும்.
இதில் ஆர்.டி.ஆர்.180 மாடல் விலை ரூ.90,978 ஆகும். மற்றொரு மாடலான ஆர்.டி.ஆர்.160 4வி மாடல் விலை ரூ.89,785 ஆகவும், அபாச்சே 200 மாடல் விலை ரூ.1.11 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 12 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்ட முடியும். அதிகபட்ச வேகம் மணிக்கு 128 கி.மீ. ஆகும். சீறிப் பாயும் அபாச்சே இப்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் (ஏ.பி.எஸ்) வந்துள்ளது இத்தகைய மோட்டார் சைக்கிளை விரும்பும் இளைஞர்களை மேலும் கவரும் என்று நிச்சயம் நம்பலாம்.
Related Tags :
Next Story