வானவில் : புதிய பஜாஜ் பிளாட்டினா 100 கே.எஸ்


வானவில் :   புதிய பஜாஜ் பிளாட்டினா 100 கே.எஸ்
x
தினத்தந்தி 3 April 2019 12:03 PM IST (Updated: 3 April 2019 12:03 PM IST)
t-max-icont-min-icon

இரு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனமான பஜாஜ் மோட்டார்ஸ் புதிய மாடல் பிளாட்டினா 100 கே.எஸ். மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இதில் கோம்பி பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) உள்ளது. மிகவும் சவுகரியமான சவாரியை அளிக்கும் இந்த மோட்டார் சைக்கிளின் விலை ரூ.40,500. இந்த மோட்டார் சைக்கிள் கிக் ஸ்டார்ட் வகையைச் சேர்ந்தது. இதில் கம்பர்ட்தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இது சவுகரியமான பயணத்தை வழங்கும்.

இதில் உள்ள டி.டி.எஸ்.ஐ. தொழில்நுட்பம் எரிபொருளை சிக்கனமாக செலவிடும். இதனால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும். பிற மோட்டார் சைக்கிளை விட இதில் அதிர்வுகள் 20 சதவீதம் வரை குறையும்.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கம்பர்ட் தொழில்நுட்பம் இதற்கு முக்கிய காரணமாகும். நீளமான முன்புற சஸ்பென்ஷன், ரப்பர் பேட்கள், ஒரே சீரான டயர் பட்டன்கள், ஸ்பிரிங் அழுத்தம் தரும் மென்மையான இருக்கை ஆகியன தொல்லையற்ற பயணத்தை வாகனம் ஓட்டுபவருக்கும், பின் இருக்கையில் பயணிப்பவருக்கும் உறுதி செய்கின்றன. இதில் மிகவும் அழகிய எல்.இ.டி. விளக்கு உள்ளது. கருப்பு, சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் இது கிடைக்கிறது.

Next Story