வானவில் : பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 எஸ்.யு.வி.


வானவில் :   பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 எஸ்.யு.வி.
x
தினத்தந்தி 3 April 2019 12:11 PM IST (Updated: 3 April 2019 12:11 PM IST)
t-max-icont-min-icon

சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 12 கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் முதலாவது காராக பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 எஸ்.யு.வி. அறிமுகமாக உள்ளது. முதலில் டீசல் என்ஜின் மாடலையும் பின்னர் பெட்ரோல் மாடலையும் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு 6 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது.

இது 265 ஹெச்.பி. திறன் மற்றும் 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 8 ஆட்டோமேடிக் கியர்களையும் கொண்டது.

இப்புதிய மாடல் காரானது நிறுவனத்தின் எக்ஸ்5 வரிசையில் ஐந்தாவது தலைமுறை மாடலாகும். காரில் இது மிகவும் நீளமானது. இதன் அகலமும், உயரமும் முந்தைய மாடலைக் காட்டிலும் அதிகம். விரிவுபடுத்தப் பட்ட இந்த இடவசதி பயணிகள் சவுகரியமாக பயணிக்க ஏதுவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் நீளம் 4,921 மி.மீ., அகலம் 1,970 மி.மீ., உயரம் 1,737 மி.மீ. ஆகும். இதன் சக்கரங்கள் 2,975 மி.மீ. அளவில் இருக்கிறது. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. முன்புற மற்றும் பின்புற விளக்குகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. சொகுசாக நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.


Next Story