வானவில் : புதுமையான ‘ரோ’ சைக்கிள்
தண்ணீரில் துடுப்பு போட்டு படகு ஓட்டி பார்த்திருப்போம். தரையில் ஓட்டி பார்த்திருக்கிறீர்களா? ‘ரோ’ சைக்கிள் என்னும் இந்த கருவி பெயருக்கேற்றார் போல துடுப்பு படகு மற்றும் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களின் வடிவத்தையும் இணைத்து உருவாக்கப் பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க உடற்பயிற்சி செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறம் கொடுக்கப்பட்டிருக்கும் கயிற்றை பிடித்து முன்னிருந்து பின்பாக இழுக்கும் போது துடுப்பு அசைப்பதை போன்றிருக்கும். நம்முடைய உடல் பலத்தை உபயோகித்து இதைத் தள்ளும் போது தசைகள் வலுப்பெறும். கைகளுக்கு மிகச் சிறந்த பயிற்சியாகவும் இருக்கும். இந்த வண்டியை நமது வசதிக்கேற்ப ஆல்டர் செய்து பயன்படுத்தலாம்.
பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப் பினும் முழு உடலையும் வலுவேற்றும் இதன் செயல்திறன் பாராட்டுக்குரியது. வெகு விரைவில் மார்க்கெட்டுக்கு வருகிறது இந்த ரோ சைக்கிள்.
Related Tags :
Next Story