வானவில் : போனை பாதுகாக்கும் பேண்ட்
போன் பேசிக் கொண்டிருக்கும் போதே நம்மையும் அறியாமல் சில நேரங்களில் தவற விட்டு விடுவோம்.
விலையுர்ந்த போன்கள் கூட கீழே விழுவதால் உடைந்து விடும். இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த யாப் பேண்ட் ( YAP BAND ). ஸ்மார்ட் போன் மற்றும் அதன் கேஸுக்கு இடையில் மாட்டிக்கொள்ளக்கூடிய இந்த பேண்ட் கையிலிருந்து போன் நழுவாமல் பார்த்துக் கொள்ளும். நடக்கும் போதோ, டைப் செய்யும் பொழுதோ, வெளியிடங்களுக்கு செல்லும் பொழுதோ இதனை அணிந்துக் கொள்ளலாம். எந்த வகையான செல்போனிலும் இதனை பொருத்திக் கொள்ளலாம்.
கைகளுக்கு உறுத்தாத, உயர்தரமான எலாஸ்டிக்கினால் செய்யப்பட்டுள்ள இந்த பேண்ட் நாளடைவில் லூஸாகி விடக் கூடும் என்று அஞ்ச வேண்டாம். வருடக் கணக்கில் உபயோகித்தாலும் இதன் தரம் குறையாது.
Related Tags :
Next Story