வானவில் : நைக் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஷூ
சர்வதேச பிராண்டான நைக் சமீபகாலமாக நவீன தொழில்நுட்பத்திலான ஷூக்களை தயாரித்து வருகிறது.
விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் (ஷூக்கள்) தயாரிக்கும் சர்வதேச பிராண்டான நைக் சமீபகாலமாக நவீன தொழில்நுட்பத்திலான ஷூக்களை தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் ஸ்மார்ட் போன் உதவியோடு லேஸ்களை இறுக கட்டும் வசதி கொண்ட ஸ்மார்ட் ஷூவை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அடாப்ட் பிபி என்ற பெயரில் வந்துள்ள இந்த ஷூவின் விலை ரூ.24 ஆயிரமாகும். இந்த ஷூவின் செயல்பாடுகள் ஸ்மார்ட்போனால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் காலில் அணிந்து உங்கள் வசதிக்கு ஏற்ப கைகளால் லேஸ்களைக் கட்டத் தேவையில்லை.
ஸ்மார்ட்போன் உதவியோடு உங்களுக்கு சவுகரியமான அளவுக்கு லேஸ்களை இறுகச் செய்ய முடியும். இந்த ஸ்மார்ட் ஷூவினுள் ஆக்சிலரோமீட்டர், கைராஸ்கோப், வெப்ப உணர் கருவி உள்ளிட்டவை உள்ளன. நீங்கள் நாள்தோறும் நடக்கும் தூரத்தை இதில் உள்ள ஆக்சிலரோமீட்டர் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பிவிடும். ஐ.ஓ.டி. எனப்படும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் நுட்பத்தில் இது செயல்படுகிறது.
Related Tags :
Next Story